உதயநிதி படத்திற்கு இவரா ஜோடி?

நிமிர் படத்தை அடுத்து சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் பெயர் வெளியாகி இருக்கிறது.
உதயநிதி படத்திற்கு இவரா ஜோடி?
Published on
உதயநிதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘நிமிர்’. இதில் இவருடன் நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குநர் மகேந்திரன், சண்முகராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரியதர்ஷன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற ஜனவரி மாதம் ரிலீசாக இருக்கிறது.

இப்படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின், சீனுராமசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2018-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்குமுன் சீனு ராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் சீனுராமசாமியை தமன்னா சந்தித்த புகைப்படமும் வெளியானது. இதனால், தமன்னாதான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு ‘கண்ணே கலைமானே’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com