ரஜினிக்கு போட்டியாக தோற்றத்தை மாற்றிக் கொண்டேன் - திரிஷா

விஜய் சேதுபதி ஜோடியாக திரிஷா நடித்துள்ள 96 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், பேசிய திரிஷா, பேட்ட படத்தில் ரஜினிக்கு போட்டியாக தனது தோற்றத்தை இளமையாக்கி கொண்டதாக திரிஷா கூறினார். #Trisha #96TheMovie
ரஜினிக்கு போட்டியாக தோற்றத்தை மாற்றிக் கொண்டேன் - திரிஷா
Published on

திரிஷாவும், விஜய் சேதுபதியும் முதல் முறையாக, ‘96’ என்ற படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். நந்தகோபால் தயாரித்துள்ளார். படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நடந்தது.

அதில் விஜய் சேதுபதி, திரிஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு திரிஷா அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:- விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக ஜோடி சேர்ந்து இருக்கிறீர்கள். அவருடைய படங்களை பார்த்து இருக்கிறீர்களா?

பதில்:- ‘விக்ரம் வேதா’ படத்தை இரண்டு முறை பார்த்து இருக்கிறேன்.

கேள்வி:- சொந்த வாழ்க்கையில் காதல் அனுபவம் இருக்கிறதா?

பதில்:- இதுவரை எனக்கு காதல் அனுபவம் ஏற்படவில்லை. என்றாலும், எனக்கு காதல் படங்கள் ரொம்ப பிடிக்கும்.

கேள்வி:- ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

பதில்:- சந்தோஷமாக இருந்தது. அவர் படத்துக்கு படம் இளைஞர் ஆகிக்கொண்டே போகிறார். அவருக்கு போட்டியாக நானும் என் தோற்றத்தை இளமையாக்கி கொண்டேன். முன்பை விட, என் உடல் எடையை குறைத்து இருக்கிறேன்.

கேள்வி:- அவருடன் நடித்தபோது உங்களுக்கு ‘ஜூனியர்-சீனியர்’ என்ற வித்தியாசம் தெரியவில்லையா?

பதில்:- எனக்கும் சரி, அவருக்கும் சரி, ஜூனியர்-சீனியர் என்ற வித்தியாசம் தெரியவில்லை. இருவரும் கதாபாத்திரங்களாக இருந்தோம். நடிப்பில், அவருடன் போட்டி போட முடியாது. ஒரே டேக்கில் நடித்து விட்டு போய் விடுகிறார். அவருக்கு சமமாக நடிப்பது, சிரமமாக இருந்தது.

கேள்வி:- ரஜினிகாந்துடன் நடிப்பதை ஒரு லட்சியமாக வைத்து இருந்தீர்கள். அந்த ஆசையும் நிறைவேறி விட்டது. அடுத்து...?

பதில்:- இன்னொரு ரவுண்டு போகலாம் என்று நினைக்கிறேன்.

கேள்வி:- சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- நல்ல தீர்ப்பு. பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை. சந்தோஷமாக இருக்கிறது.

கேள்வி:- அரசியலுக்கு வரும் ஆசை இருக்கிறதா?

பதில்:- அரசியலில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

கேள்வி:- யாருடைய வேடத்தில் நடிக்க ஆசை?

பதில்:- ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசை. ஆனால், அவருடைய வேடத்தில் வேறு யாரோ நடிக்கப்போவதாக கேள்விப்பட்டேன்.”

இவ்வாறு திரிஷா பதில் அளித்தார். #Trisha #96TheMovie

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com