நாளை வெங்கட் பிரபுவின் `பார்ட்டி'

வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி வரும் `பார்ட்டி' படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நாளை வெங்கட் பிரபுவின் `பார்ட்டி'
Published on

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் `பார்ட்டி'. 

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளர். நடிகர் ஷியாம் ஸ்டைலிஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்ய, ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். 

சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், `பார்ட்டி' படத்தின் டீசர் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். ரஜினிகாந்த் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், `பார்ட்டி' படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com