தீரன் அதிகாரம் ஒன்று

எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் முன்னோட்டம்.
தீரன் அதிகாரம் ஒன்று
Published on

இதில் கார்த்தி ஜோடியாக ரகுல் பிரீத்திசிங் நடிக்கிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறு கிறார்....

“இது போலீஸ் கதை. என்றாலும் வழக்கமான போலீஸ் கதை அல்ல. யதார்த்தமாக ஒரு போலீஸ் அதிகாரி சந்திக்கும் பிரச்சினைகளை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம். இந்த போலீஸ் 10 பேரை அடித்து பறக்கவிட மாட்டார்.

கார்த்தி சக மனிதரைப் போல் வாழும் ஒரு போலீஸ். தீரன் என்கிற திருமாறன் என்பது அவருடைய பெயர். அவருக்கு காதல், கல்யாணம், வேலை தொடர்பான வாழ்க்கை இருக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்ததுதான் அதிகாரம் ஒன்று.

கார்த்தி ஒரு விசாரணைக்காக வட மாநிலங்களுக்கு செல்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பிரச்சினையை சந்திக்கிறார். இந்த படத்தில் 4 வட மாநிலத்தைச் சேர்ந்த வில்லன்கள் நடித்திருக்கிறார்கள். மும்பையில் ஜாமீன்கா, மராட்டியத்தில் கிஷோர்கதம், போஜ்புரியைச் சேர்ந்த ஜோகித் பதக், குஜராத்தைச் சேர்ந்த அபிமான் சிங் ஆகியோர் கார்த்தியுடன் மோதும் வில்லன்கள்.

1995 முதல் 2005 வரை 10 வருடங்களில் நடக்கும் கதை. செய்திதாள்களில் படிக்கும் குற்ற செய்திகளில் ஒன்றை படமாக்கி இருக்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com