

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் புதிய நடிகை கமிட்மென்ட் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. படக்குழுவினர் "Every beautiful story has a moment like this" என்ற கேப்ஷனுடன் இதற்கான ப்ரோமோ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் அறிவிப்பில், பிரபல தென்னிந்திய நடிகை ஸ்ரீலீலா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் ஏற்கனவே நயன்தாரா, சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அப்டக்குழு தற்போது நடிகை குறித்த அறிவிப்பை நாளை வெளியிடுவோம் என்று வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார். இதுவரை மூன்று கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.
இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில், அதற்கான அப்டேட் நாளை வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. அதுதொடர்பான, ப்ரோமோ விடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.