‘தர்மன்’ 3ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

இப்படத்தில் வில்லனாக ராம் பொதினேனி நடிப்பதாக கூறப்படுகிறது.
‘தர்மன்’ 3ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
Published on: 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக, படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து படப்பிடிப்பு தளத்தின் புதிய புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படமாக உருவாகி வருகிறது ‘தர்மன்’. இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர்களுடன் இணைந்து ராஷி கண்ணா, யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், இம்மாத தொடக்கத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com