நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய LCU நாயகன்

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ரஜினி நடிப்பில் படத்தை இயக்கி வருகிறார். கைதி 2, லியோ 2, விக்ரம் 2 போன்ற படங்களையும் இயக்கவுள்ளார்.பிறந்தநாள் கொண்டாடும் அவர் நேற்று அவரது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்
நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய LCU நாயகன்
Published on

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் எடுக்கும் படங்களில் அவருக்கென் ஒரு ஸ்டைல் இருக்கும். கடைசியாக கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் எடுத்த படத்திலயே அதிக வசூலை அள்ளி குவித்த படம் லியோ. மார்வல் யூனிவர்ஸ், டி.சி யூனிவர்ஸ் போன்ற கான்செப்டுகளை ஹாலிவுட் படங்களிலே நாம் பார்த்து இருப்போம். தமிழ் சினிமாவில் முதன் முறையாக தனக்கு என LCU யூனிவர்ஸ் ஒரு கான்செப்டை உருவாக்கினார். இதற்கு முன் கமல் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கினார். அப்படமும் கமல் ரசிகர்களின் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்டது. கமலின் திரையுலக பயணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மிகவும் முக்கியமான படம்.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ரஜினி நடிப்பில் படத்தை இயக்கி வருகிறார். கைதி 2, லியோ 2, விக்ரம் 2 போன்ற படங்களையும் இயக்கவுள்ளார். சமீபத்தில் விஜய்குமார் நடிப்பில் வெளிவந்த 'ஃபைட் க்ளப்'படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரித்தார். இதுவே அவர் தயாரித்த முதல் படம்.

இன்று (மார்ச் 14) பிறந்தநாள் கொண்டாடும் அவர் நேற்று அவரது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். லோகேஷின் நண்பரான இயக்குனர் ரத்னகுமார், நடிகர் அர்ஜூன் தாஸ், நடிகை ஸ்ருதிஹாசன்  அப்போது உடனிருந்தனர். இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்டம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com