‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய்?

தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
தேசிங்கு பெரியசாமி, விஜய்
தேசிங்கு பெரியசாமி, விஜய்
Published on

நடிகர் விஜய், மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது.

தேசிங்கு பெரியசாமி

இந்நிலையில், இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அண்மையில் நடிகர் விஜய்யை சந்தித்து கதை ஒன்றை சொன்னாராம், அது விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதனால் விஜய்யின் 67-வது படத்தை அவர் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com