அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய யுவன்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்திற்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தீவிரமாக பணிபுரிந்து வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா - அஜித்
யுவன் சங்கர் ராஜா - அஜித்
Published on

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக ‘வலிமை’ திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதால் படம் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு அறிக்கை வாயிலாக பதிலளித்த படக்குழு, படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் அஜித் குமார், அனுபவமிக்க தயாரிப்பாளரான போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து ‘வலிமை’ படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளியிடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும் என்று கூறினார்கள்.

இந்நிலையில் ‘வலிமை’ திரைப்படம் குறித்து சமூக வலைதளத்தில் புகைப்படம் பதிவிட்டிருக்கும் யுவன் சங்கர்ராஜா, படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் தொடங்கியிருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளார். இச்செய்தி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com