பொங்கல் ரேசில் இருந்து விலகும் பேட்ட, தல பொங்கல் உறுதி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட படம் பொங்கல் ரேசில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #Rajinikanth #Viswasam
பொங்கல் ரேசில் இருந்து விலகும் பேட்ட, தல பொங்கல் உறுதி
Published on

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னணி நடிகர்களின் படங்கள் ஆக்கிரமித்துள்ளன. அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் பொங்கலுக்கு ரிலீசாகவிருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரஜினியின் பேட்ட, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி உள்ளிட்ட படங்கள் பொங்களுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டன.

இவ்வாறாக பெரிய படங்கள் பொங்கலுக்கு படையெடுத்துள்ளதால் கடைசி நேரத்தில் எந்த படமாவது தள்ளிப்போக வாய்ப்புள்ளது என்று உறுதி என்று எதிர்பார்த்து வந்த நிலையில், தகவல்படி ரஜினிகாந்தின் பேட்ட, பொங்கல் ரேசில் இருந்து விலகவிருப்பதாக கூறப்படுகிறது. 

பேட்ட படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் பலரும் கேட்டுக் கொண்டுள்ளார்களாம். மேலும், தயாரிப்பாளர் சங்கமும் பேட்ட படத்தை பொங்கலில் இருந்து வேறு தேதிக்கு மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

எனவே பேட்ட படம் பொங்கல் ரேசில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பேட்ட பொங்கல் ரேசில் இருந்து விலகும் பட்சத்தில் மற்ற மூன்று படங்களும் திரையரங்குகளை பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் ஒரு சில சிறு பட்ஜெட் படங்களும் ரிலீசாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. #Petta #Rajinikanth #Viswasam

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com