விஜய் சேதுபதி படத்தில் ஒப்பந்தமான டப்ஸ்மேஷ் புகழ் மிர்னாலினி

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் நடிக்க டப்மேஷ் புகழ் மிர்னாலினி ஒப்பந்தமாகியிருக்கிறார்.
விஜய் சேதுபதி படத்தில் ஒப்பந்தமான டப்ஸ்மேஷ் புகழ் மிர்னாலினி
Published on

தியாகராஜன் குமாரராஜா இயக்கி தயாரித்து வரும் படம் `சூப்பர் டீலக்ஸ்'.

விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் டப்ஸ்மேஷ் மூலம் பிரபலமடைந்திருக்கும் மிர்னாலினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் மிர்னாலினி கோலிவுட்டில் அறிமுகமாகிறார். இதுதவிர மற்றொரு படம் ஒன்றிலும் மிர்னாலினி நடித்து வருவதாக கூறப்படுகிறது.  

தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். வேம்பு என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். 

`ஆரண்ய காண்டம்' படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com