தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் சிம்பு

சுந்தர்.சி. இயக்கத்தில் சிம்பு - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #VanthaRajavathaanVaruven #STR
தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் சிம்பு
Published on

`செக்கச்சிவந்த வானம்' படத்திற்கு பிறகு சிம்பு அடுத்ததாக சுந்தர்.சி. இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், கேத்திரன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், யோகி பாபு, ரோபோ சங்கர், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பிப்ரவரி 3-ஆம் தேதி சிம்பு தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே படத்தை பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

தெலுங்கில் பவன் கல்யாண் நடித்து மெகாஹிட்டான ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #VanthaRajavathaanVaruven #VRV #STR 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com