

இதுதவிர சந்தானம் தற்போது கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் ‘ஓடி ஓடி உழைக்கணும்’, செல்வராகவன் இயக்கத்தில் `மன்னவன் வந்தானடி', சேதுராமன் இயக்கத்தில் `சக்க போடு போடு ராஜா', படத்தில் நடித்து வருகிறார். இதில் `சக்க போடு போடு ராஜா', படத்தில் அவருக்கு ஜோடியாக வைபவி சந்தியா நடிக்கிறார். விவேக், சம்பத் ராஜ், ஆர்யன், வி.டி.வி. கணேஷ், ரோபோ ஷங்கர், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்திருக்கிறார்.
சிம்பு இசையில் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக படத்தில் இருந்து ``காதல் தேவதை" என்ற வரிகளில் தொடங்கும் சிங்கிள் டிராக் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாக இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான வி.டி.வி.கணேஷ் கூறியிருக்கிறார். அந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியிருக்கிறார். மேலும் இப்படத்தில் உள்ள மற்ற பாடல்களை டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் மற்றும் அனிருத் பாடியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.