உதயநிதியின் படை வெல்வதற்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இப்படை வெல்லும்’ படத்தின் இசையை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட இருக்கிறார்.
உதயநிதியின் படை வெல்வதற்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்
Published on

‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. ‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ படத்தை இயக்கிய கவுரவ் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக ‘அச்சம் என்பது மடமையடா’ புகழ் மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்துள்ளார்கள்.

டி.இமான் இசையமைத்துள்ள இதற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் நடிகர் தனுஷ் டிவிட்டிய டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது, இப்படத்தின் இசையை நாளை மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் வெளியிட இருக்கிறார். படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com