சிம்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு நடிப்பில் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘இது நம்ம ஆளு’ படத்தின் தெலுங்கு பதிப்பான `சரசுடு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிம்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது. தெலுங்கில் ‘சரசுடு’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் ‘சரசுடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.

இப்படத்தின் தமிழ் பதிப்பை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருந்தன. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டது. சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com