விஜய்க்கு வில்லனாகும் ஷாருக்கான்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. #Thalapathy63 #Vijay
விஜய்க்கு வில்லனாகும் ஷாருக்கான்
Published on

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்ட விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் படமாகிறது.

இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. பின்னர் மெர்சல் படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது அட்லி - ஷாருக்கான் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதன்மூலம் விஜய் படத்தில் ஷாருக்கான் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

இந்த நிலையில், தளபதி 63 படத்தில் ஷாருக்கான் வில்லனாக நடிப்பதாக புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. இந்த படத்தில் வில்லத்தனமான மற்றொரு கதாபாத்திரத்தில், கால்பந்து விளையாட்டுக் கழகம் ஒன்றின் தலைவராக ஜாக்கி ஷெராப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #SharukhKhan #Atlee

X

Maalai Malar
www.maalaimalar.com