தீரனை பாராட்டிய சங்கர்

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்குனர் சங்கர் பாராட்டியுள்ளார்.
தீரனை பாராட்டிய சங்கர்
Published on
கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கி இருந்தார். கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். ஜிப்ரான் இசையமைத்திருந்த இதற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.

இப்படத்தில் கார்த்தி ‘தீரன் திருமாறன்’ எனும் நேர்மையான போலீஸ் டி.எஸ்.பி-யாக நடித்திருந்தார். இந்த படத்தின் கதைக்களம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும், காவல் துறை அதிகாரிகளும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி, புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், தீரன் படத்தை பார்த்த இயக்குனர் சங்கர், ‘அற்புதமான போலீஸ் படம். நகம் கடித்து, சீட்டின் நுனியில் உட்கார வைத்திருக்கிறார்கள். சிறந்த முயற்சி’ என்று நடிகர் கார்த்தி, இயக்குனர் வினோத், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.
X

Maalai Malar
www.maalaimalar.com