

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 62-வது படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போஸ்டரில் நடிகர் விஜய் வாயில் சிகரெட், கையில் லைட்டர், கண்ணில் கூலிங்கிளாஸ் என மாஸ் லுக்குடன் தோற்றம் அளிக்கிறார். இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்பதும் உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில், படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்திருப்பதும் உறுதியாகி உள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் நிலையில், பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார்.
மெர்சல் படத்திற்கு பிறகு விஜய் - ஏ.ஆர்.ரகுமானுடன் விவேக் மீண்டும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் உள்ளிட்ட அனைத்து பாடல்களின் வரிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சர்கார் படத்திலும் விவேக் ஒப்பந்தமாகி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
போஸ்டர் ரிலீசுக்கு பிறகு விவேக்கும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விவேக் கூறியிருப்பதாவது,
`தளபதி விஜய்க்காக இசை மேதாவி ஏ.ஆர்.ரகுமானுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. மீண்டும் இவர்கள் இரண்டு பேருடன் இணைவது பெருமிதம். பொதுநலத்தை மனதில் வைத்து படம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுடன் இணைய வேண்டுமென்ற கனவும் நிறைவேறிவிட்டது. சர்கார் படக்குழுவுக்கு நன்றி' என்று குறிப்பிட்டிருக்கிறார். #Sarkar #HBDThalapathyVIJAY #Vijay62