படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி

படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள்: உதயநிதி ஸ்டாலின் அதிரடி
Published on

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள், நன்றாக இல்லையென்றால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் கொடுங்கள் என்று பேசினார்.

சமீபத்தில்தான் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால், எந்த படங்களுக்கும் விமர்சனம் கொடுப்பதாக இருந்தால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் கொடுங்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு மாற்று யோசனையாக நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள், நன்றாக இல்லையென்றால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் கொடுங்கள் என்று உதயநிதி பேசியதை அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com