அவர் ஸ்டைலும், பஞ்ச் டயலாக்கும் எனக்கு எப்பவுமே பிடிக்கும் - சஞ்சிதா ஷெட்டி

பல படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சஞ்சிதா ஷெட்டி, அவர் ஸ்டைலும், பஞ்ச் டயலாக்கும் எனக்கு பிடிக்கு என்று பேட்டியளித்துள்ளார். #SanchitaShetty
அவர் ஸ்டைலும், பஞ்ச் டயலாக்கும் எனக்கு எப்பவுமே பிடிக்கும் - சஞ்சிதா ஷெட்டி
Published on

சூது கவ்வும் படம் மூலம் கவனிக்க வைத்தவர் சஞ்சிதா ஷெட்டி. இவர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்து இருக்கும் ஜானி படம் வெளியாகி உள்ளது. அவர் அளித்த பேட்டி:

இது ஒரு விறுவிறுப்பான திரில்லர். படம் பார்க்கும் ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்ந்து படம் பார்க்க வைக்கும்.

பிரசாந்த்?

அவர் செம ஜாலி டைப். நடிக்கிறதுக்கு முன்னாடி நானும் எல்லோர் மாதிரி அவரோட ரசிகைதான். ஆனா, `ஜானி’யில அவர்கூட நடிச்சதுக்குப் பிறகு, நல்ல நண்பர் ஆகிட்டார்.

உங்களை அதிகம் படங்களில் பார்க்க முடியவில்லையே?

தொடர்ந்து படம் பண்ணிக்கிட்டே இருக்கிறதுல அர்த்தமில்லை. கொஞ்சமா நடிச்சாலும், நச்சுனு கேரக்டர்ஸ் பிடிக்கணும். என் நடிப்பில் அடுத்து இன்னும் சில படங்கள் வர இருக்கு.

நடிக்க வந்ததன் காரணம்?

காரணம் தெரியலை. நான் செம கியூட்டா இருக்கேன்னு ப்ரெண்ட்ஸ், வீட்டுல இருக்கிறவங்க சொல்வாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான், ‘சினிமாவுக்கு முயற்சி பண்ணிப்பாரு’னு சொல்ற அளவுக்கு வளர்ந்துடுச்சு. முதலில் ‘தில்லாலங்கடி’யில ஒரு கேரக்டர் கிடைச்சது. அந்த வேடத்துக்கு கிடைத்த வரவேற்பு என்னை முழு நேர நடிகையாக்கி விட்டது.

தமிழ் ரசிகர்கள் எப்படி?

அவங்க வீட்டுப் பொண்ணு மாதிரி நினைச்சு பேசுறாங்க. ஒருநாள் ஷூட்டிங்ல இருக்கும்போது, ‘ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கிறோமே?ன்னு குடும்பத்தோட வருவாங்க. இதையெல்லாம் நினைச்சாலே சந்தோ‌ஷமா இருக்கும். ஓப்பனா சொன்னா, சென்னை ரசிகர்களுக்காகவே தமிழ்ல நிறைய படங்கள்ல நடிக்கணும். ஏன்னா, என்னை ரசிகர்கள் நேசிப்பதற்கு மேல் நான் அவர்களை நேசிக்கிறேன்.

பிடித்த கதாநாயகி?

கஜோல். அவங்க கண்ணு அவ்ளோ அழகு. வெண்ணிலவே வெண்ணிலவே பாட்டை கஜோலுக்காக திரும்பத் திரும்பப் பார்ப்பேன்.

கனவு வேடம்?

அப்படி எந்த எண்ணமும் இல்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தர்ற எல்லா வேடமுமே எனக்கு கனவு வேடம்தான்.

பிடித்த கதாநாயகன்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். அவர் ஸ்டைலும், பஞ்ச் டயலாக்கும் எனக்கு எப்பவுமே பிடிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com