டிராபிக் ராமசாமி பட டீசரை வெளியிட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்.

விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிப்பில் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் வெளியிட்டுள்ளார். #TrafficRamasamy #SagayamIAS
டிராபிக் ராமசாமி பட டீசரை வெளியிட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்.
Published on

டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `டிராஃபிக் ராமசாமி' படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எஸ்.  அவர்கள் இன்று வெளியிட்டார். படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் அவர்கள்  கூறும்போது, 

"டிராஃபிக் ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர். தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில், இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும், தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் உருவாகியுள்ளது. 

துணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில்  டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன், தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள்." என்று பாராட்டியுள்ளார்.

இந்த படத்தில் கதை நாயகனாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க, அவரது மனைவியாக கதாபாத்திரத்தில் ரோகினி நடித்துள்ளார். புதுமுக இயக்குநர் விக்கி இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

பிரகாஷ்ராஜ், சீமான், குஷ்பூ, ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர் . 

விஜய் ஆண்டனி மற்றும் மற்றுறொரு பிரபல நடிகரும் சிறப்பு வேடத்தில் வருகிறார்கள். குகன் எஸ்.பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். #TrafficRamasamy #SagayamIAS

படத்தின் டீசர்:-

X

Maalai Malar
www.maalaimalar.com