சிக்கலில் ரஜினியின் பேட்ட

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட்ட படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், படத்தின் தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #Petta #Rajinikanth
சிக்கலில் ரஜினியின் பேட்ட
Published on

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் திரைக்கு வருகிறது. இந்த இரு படங்களுக்கும் தியேட்டர்கள் ஒதுக்குவதில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், சென்னையில் பேட்ட படத்திற்கு அதிக திரைகளும், மற்ற ஊர்களில் விஸ்வாசம் படத்திற்கு கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிக்கு தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் படத்தை மற்ற மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் பேட்ட படத்திற்கு திரையரங்கு ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாலகிருஷ்ணா நடிப்பில் என்.டி.ஆர். வாழ்க்கைப்படம், ராம்சரணின் வினய விதய ராமா, வெங்கடேஷ், வருண் தேஜா நடிப்பில் எஃப் 2 உள்ளிட்ட படங்கள் சங்ராந்திக்கு ரிலீசாக இருப்பதால் இந்த மூன்று படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் பேட்ட படத்திற்கு திரைகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே பேட்ட படத்தின் தெலுங்கு பதிப்பை ஒரு வாரம் கழித்து ரிலீஸ் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை. எனினும் பாலிவுட்டில் பேட்ட 10-ஆம் தேதி ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். #PettaPongalParaak #PettaPongal2019 #Petta #Rajinikanth

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com