கொரோனா மட்டும் வரலேனா இந்நேரம் மாஸ்டர் ரிலீசாகிருக்கும் - பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி

கொரோனா மட்டும் வரலேனா இந்நேரம் மாஸ்டர் ரிலீசாகிருக்கும் என பிரபல இயக்குனர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஜய்யுடன் ரத்னகுமார்
விஜய்யுடன் ரத்னகுமார்
Published on

விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மாஸ்டர் படத்தை ஏப்ரல் 9-ந் தேதி (இன்று) வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. 

இந்நிலையில், ஆடை படத்தின் இயக்குனரும், மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: "கொரோனா மட்டும் வரலேனா இந்நேரம் மாஸ்டர் ரிலீசாகி இருக்கும். முதலில் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக படப்பிடிப்புக்கு சிக்கல், பின்னர் போராட்டம், அதையடுத்து ஐடி ரெய்டு தற்போது கொரோனா. ஒரு ரசிகனாக இது மிகவும் வருத்தமாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com