சங்கரை ஓவர் டேக் செய்த பா.இரஞ்சித்

சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தை பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காலா’ திரைப்படம் ஓவர் டேக் செய்திருக்கிறது. #Kaala
சங்கரை ஓவர் டேக் செய்த பா.இரஞ்சித்
Published on

இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. `கபாலி' படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் - பா.இரஞ்சித் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. `கபாலி' படத்தை தொடர்ந்து ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறார். 

சென்னை, மும்பை பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது ‘காலா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. இதில் ரஜினி மட்டும் கடைசியாக டப்பிங் பேசி முடித்தார்.

தற்போது இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம் ஏப்ரலில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் காலா திரைப்படத்தை ஏப்.14ல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில், ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே,  அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com