பேட்ட டிரைலரை புத்தாண்டில் வெளியிட படக்குழு திட்டம்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் டிரைலரை புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Petta #PettaTrailer #Rajinikanth
பேட்ட டிரைலரை புத்தாண்டில் வெளியிட படக்குழு திட்டம்
Published on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வந்தது படக்குழு.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முடிவுற்று, தணிக்கை அதிகாரிகளுக்குத் திரையிட்டு காட்டினார்கள். அவர்கள் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க சந்தோ‌ஷம் அடைந்துள்ளது படக்குழு. இதனைத் தொடர்ந்து ‘பேட்ட பொங்கல் பராக்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தணிக்கைப் பணிகள் முடிவடைந்துள்ளதால், முழுமையாக விளம்பரப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தின் டிரெய்லரை புத்தாண்டுக்கு வெளியிடலாமா என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு. ’பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன், சிம்ரன், திரிஷா, நவாசுதின் சித்திக், சசிகுமார், விஜய் சேதுபதி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராமதாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். #Petta #PettaTrailer #Rajinikanth

X

Maalai Malar
www.maalaimalar.com