ரஜினி போட்ட ஒரே டுவிட்.... இந்திய அளவில் டிரெண்டான கந்தனுக்கு அரோகரா

நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்ட கந்தனுக்கு அரோகரா என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி உள்ளது.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக நடிகர்கள் நட்ராஜ், பிரசன்னா, சௌந்தரராஜா, ராஜ் கிரண், லாரன்ஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கந்த சஷ்டி கவசம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: "கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள், இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.... ஒழியனும். எல்லா மதமும் சம்மதமே,  கந்தனுக்கு அரோகரா"  என பதிவிட்டுள்ளார்.

இந்த டுவிட்டை கந்தனுக்கு அரோகரா என்கிற ஹேஷ்டேக்குடன் ரஜினி பதிவிட்டிருந்தார். தற்போது அந்த ஹேஷ்டேக் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com