கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பேராசிரியராக நடிக்கிறாரா ரஜினி?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ரஜினி பேராசிரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #KarthikSubbaraj
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பேராசிரியராக நடிக்கிறாரா ரஜினி?
Published on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு இமயமலை பகுதிகளில் நடக்க இருக்கிறது. கடந்த மாதம் படப்பிடிப்பு நடத்தவிருக்கும் தளங்களை தேர்வு செய்ய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் திரு இமயமலை, காத்மாண்டு ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தனர்.

கடந்த வாரம் ரஜினி மற்றும் மற்ற நடிகர், நடிகைகளுக்கான ஆடைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று இருக்கின்றன. இந்த படத்துக்கான முதல் பகுதி படப்பிடிப்பை ஒரு மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. கடந்த சனிக்கிழமை ரஜினி விதவிதமான ஆடைகளில் தோன்றும் போட்டோஷூட் நடந்தது. ’கபாலி’ மற்றும் ’காலா’ படங்களில் தனது வெள்ளைத் தாடியுடன் தோன்றிய ரஜினிகாந்த் இந்த படத்தில் கறுப்பு முடி, தாடியோடு தோன்றுகிறார்.

சில நாட்களாக அந்த தோற்றத்தில் தான் வலம் வருகிறார் ரஜினி. இமயமலையில் உள்ள டார்ஜிலிங் பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ’இமயமலையில் படப்பிடிப்பு நடைபெறுவதால் இது ஏதோ சாமியார் கதை என்று யாரும் நினைக்க வேண்டாம், இது முழுக்க ரஜினி ரசிகர்களுக்கான படம்!’ என்று கூறி இருக்கிறார் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். 

படப்பிடிப்பு கல்லூரியில் தொடங்க இருப்பதால் ரஜினி பேராசிரியராக நடிக்கிறார் என்று ஒரு தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.  #Rajinikanth #KarthikSubbaraj

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com