‘காலா’ படத்திற்கு முன் ‘2.0’ வெளியாகும்: ரஜினிகாந்த் பேட்டி

‘காலா’ படத்திற்கு முன் ‘2.0’ வெளியாகும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.
‘காலா’ படத்திற்கு முன் ‘2.0’ வெளியாகும்: ரஜினிகாந்த் பேட்டி
Published on

டைரக்டர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் 2-ம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், இந்தி நடிகர் அக்‌ஷய்குமார், நடிகை எமி ஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். துபாயில் நடந்த இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 25-ந்தேதி சென்னையில் இருந்து குடும்பத்தினருடன் துபாய் சென்றார்.

அங்கு 2.0 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டு துபாயில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில், ‘காலா’ படம் முதலில் வெளியாகுமா? என்று அவரிடம் கேட்டதற்கு ‘காலா’ படத்திற்கு முன் ‘2.0’ படம் முதலில் வெளியாகும் என்று கூறிவிட்டு காரில் ஏறிச்சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com