மெர்குரி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் `மெர்குரி' படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். #Mercury #Prabhudeva
மெர்குரி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ரஜினிகாந்த்
Published on

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக படஅதிபர்கள் நடத்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `மெர்குரி' படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தில் ரிலீசானது. 

வசனங்களே இல்லாமல், சைலண்ட் த்ரில்லர் கதையில் உருவாகி இருக்கும் `மெர்குரி' படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையிலேயே பயணித்த இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்ததுடன், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. 

இந்நிலையில், படத்தை பார்த்த நடிகர் ரஜனிகாந்த் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். படம் குறித்து ரஜினி கூறும் போது, பிரபுதேவா கலக்கிட்டாரு, கேமரா, இசை, ஸ்டன்ட் என எல்லாமே அருமை. மொத்தத்தில் சிறந்த படம் என்று பாராட்டியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ரஜினியின் வாழ்த்தால் `மெர்குரி' படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. 

ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Mercury #Prabhudeva #Rajinikanth

X

Maalai Malar
www.maalaimalar.com