ஜனவரியில் அரசியல் கட்சி அறிவிக்கிறார் ரஜினி: சத்திய நாராயணராவ்

வரும் ஜனவரி மாதம் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளிவரும் என்று சகோதரர் சத்திய நாராயணராவ் தெரிவித்துள்ளார்.
ஜனவரியில் அரசியல் கட்சி அறிவிக்கிறார் ரஜினி: சத்திய நாராயணராவ்
Published on
ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணராவ். இவர் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் மகன் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக தர்மபுரி சென்றிருக்கிறார். அங்கு, ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரின் அன்புக்கும் உரியவர் ரஜினிகாந்த். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லதே செய்வார். மக்கள் அவரை தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வரும் ஜனவரி மாதம் ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு வெளிவரும் என்றார்.

ரசிகர்களுடனான சந்திப்பின் போது தனது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி அதிரடியாக பேசினார். போர் வரும்போது பார்த்து கொள்வோம், அதுவரை பொறுமை காப்போம் என்று கூறினார். ரஜினியின் இந்த பேச்சு பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின்னர் அரசியல் குறித்து ரஜினி எதுவும் பேசவில்லை. சமீபத்தில் அரசியலுக்கு வரவேண்டிய அவசரம் தற்போது இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் கட்சி அறிவிப்பு ஜனவரியில் வரும் என்று அவரது சகோதரர் சத்திய நாராயணன்ராவ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com