பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்

இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் `பியார் பிரேமா காதல்' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #PyaarPremaKaadhal #HarishKalyan
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் படம் `பியார் பிரேமா காதல்'. புதுமுக இயக்குநர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்தை `ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ்' சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், 'கே புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரித்துள்ளனர். 

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. நல்லவைக்காக காத்திருக்க முடியாது என்று கூறியுள்ள படக்குழு படம் ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 9-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவித்துள்ளது.

காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். யுவன் இசையில் சமீபத்தில் வெளியாகிய காதல் கனியும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #PyaarPremaKaadhal #HarishKalyan #RaizaWilson

X

Maalai Malar
www.maalaimalar.com