சிம்புவின் அடுத்த படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள்!

சிம்பு அடுத்ததாக இயக்கி நடிக்க இருக்கும் படத்தில் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் இடம்பெற்றிருப்பதாக சிம்பு அறிவித்திருக்கிறார்.
சிம்புவின் அடுத்த படத்தில் இணைந்த முக்கிய பிரபலங்கள்!
Published on

இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் சில தகவல்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில் "கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்" என்று கூறியிருந்தார். இதனால் சிம்பு அடுத்ததாக தான் கைவிட்ட `கெட்டவன்' படத்தை மீண்டும் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிம்பு இன்னமும் வெளியிடவில்லை. மாறாக `பில்லா' படத்தின் மூன்றாவது பாகத்தை சிம்பு இயக்கி, நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிம்பு அறிவித்திருக்கும் புதிய படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் பாடல்கள் கிடையாது, இடைவேளை கிடையாது, இதுவரை பார்க்காததை பார்க்கப் போகிறீர்கள், படம் வருகிற செப்டம்பர் 2017-ல் வெளியாகும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். சிம்புவின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

இந்நிலையில், சில முக்கிய பிரபலங்களும் இந்த படக்குழுவில் இணைந்திருக்கின்றனர். அதாவது, சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் என்றும் சிம்பு நேற்று டுவிட்டரில் அறிவித்திருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com