

இயக்குநர் லெனின் பாரதி நடிகர் கமல்ஹாசனின் அடுத்த படத்துக்கான பதிவை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
லெனின் பாரதி மேற்குதொடர்ச்சி திரைப்படம் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர். இந்த நிலையில் மக்கள் நிதி மையம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் திரப்படம் அப்டேட் குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவிற்கு எதிர்வினையாற்றியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது
கதாநாயக மயக்க சினிமாவால் ஏற்கனவே இளைஞர்கள் மனதில் வன்முறையின் ரத்த வாசனை வீசிக் கொண்டிருக்கிறது. இதில் கமல்ஹாசன் கொஞ்சமும் சமூக சிந்தனையில்லாமல் “பழிவாங்கல் ரத்தத்தால் மட்டுமே சரி செய்யப்படும்” என தனது அடுத்த திரைப்பட விளம்பரத்தை முன்னிறுத்துவது கண்டனத்திற்குரியது.
எண்று தெரிவித்துள்ளார்.