எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்-னு சினிமாக்காரர்கள் ஆராய வேண்டும் - லெனின் பாரதி

கமல்ஹாசன் கண்டன பதிவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார். ஆராய வேண்டிய பொறுப்பு சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது.
எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்-னு சினிமாக்காரர்கள் ஆராய வேண்டும் - லெனின் பாரதி
Published on

புதுச்சேரியில் கடந்த 2-ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்திகள் புதுச்சேரி அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம், ராஞ்சியில் வெளிநாட்டு பெண் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம், மங்களூருவில் பள்ளி மாணவி முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம், சென்னையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞசன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், போதை பொருள் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் என சமீபத்திய குற்ற சம்பவங்கள் அனைத்தையும் குறிப்பிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டன பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார்.

எங்கே போகிறோம்? என்ற கேள்வியுடன் துவங்கிய இந்த பதிவுக்கு இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "'எங்கே போகிறோம்' என்று ஆராய்வதைப் போல்… கதாநாயக வழிபாட்டுச் சினிமாக்கள் மூலம் ஆணாதிக்கம், வன்முறை,போதை,வெற்றுப் பெருமை,வக்கிரம்,குரூரம் என இளம் உள்ளங்களில் விஷ விதைகளை விதைத்து.. "எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்" என்று ஆராய வேண்டிய பொறுப்பும் சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது..," என குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com