விஜய் படத்தில் நடிக்கும் பிரபுதேவா

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைலுடன் மாஸ் காட்டிவரும் பிரபுதேவா அடுத்ததாக விஜய் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
விஜய் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
Published on

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் இயக்கிய `தேவி' படத்தின் மூலம் பிரபுதேவா ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த `வனமகன்' படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பிரபுதேவா தயாரித்திருந்தார்.

இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் `மெர்குரி' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் `யங் மங் சங்', கல்யாண்.எஸ் இயக்கத்தில் `குலேபகாவலி' படத்தில் பிசியாக நடித்து வரும் நிலையில், விஜய் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நேற்று தொடங்கியது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பிரபுதேவா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். `விக்ரம் வேதா' புகழ் சாம்.சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரமோத் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com