சூர்யா படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்

செல்வ ராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 36 படத்தில் அவருடன் மோதும் வில்லன் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Suriya36 #Suriya
சூர்யா படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்
Published on

`தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்துவருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் நாயகிகளாக ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நடிக்கிறார்கள். 

சமீபத்தில் சென்னையில் துவங்கிய இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஜெகபதி பாபு நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு இந்த படத்தை தயாரிக்கின்றனர். 

இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Suriya36 #Suriya

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com