சிறப்பான, தரமான சம்பவங்கள இனிமேல் தான் பாக்க போற - பேட்ட டிரைலரில் மாஸ் காட்டும் ரஜினி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. #Petta #Rajinikanth #PettaTrailer
சிறப்பான, தரமான சம்பவங்கள இனிமேல் தான் பாக்க போற - பேட்ட டிரைலரில் மாஸ் காட்டும் ரஜினி
Published on

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் படம் பொங்கலை முன்னிட்டு 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டிரைலரில் ரஜினி ஹாஸ்டல் வார்டன், மதுரை மன்னனாக, ஸ்டைல், மாஸ், அதிரடி காட்டி கலக்கியிருப்பது தெரிகிறது. பார்க்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த, ஸ்டைலா இருக்கேனா நேச்சுரலி, சிறப்பான, தரமான சம்பவங்கள இனிமேல் தான் பாக்க போற, சத்தியமா சொல்றேன் அடிச்சு அன்றாயரோட ஓட விட்றுவன் மானம் போனா திருப்பி வராது பாத்துக்கோ, எவனுக்காவது பொண்டாட்டி, குழந்தை குட்டி செண்டிமென்ட் இருந்தா அப்டியே ஓடிப்போயிரு கொலை காண்டுல இருக்கேன், கொல்லாம விடமாட்டேன் என ரஜினி பேசும் மாஸான பஞ்சு வசனங்களுக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

மேலும் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் படத்தில் வில்லன்களாகவும், சிம்ரன், திரிஷா ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். சசிகுமார் ரஜினியின் நண்பராகவும், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி கல்லூரி மாணவர்களாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Petta #Rajinikanth #PettaTrailer

பேட்ட டிரைலர்:

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com