’படிப்பை மட்டும் யாராலும் நம்மகிட்ட இருந்து பறிக்கவே முடியாது சிதம்பரம்’ - 7 ஆண்டுகளை நிறைவு செய்த அசுரன் திரைப்படம்!

ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்த இந்த காவியத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்
asuran movie
Published on: 

7 ஆண்டுகளை நிறைவு செய்த அசுரன் திரைப்படம்

தமிழ் சினிமாவில் தேசிய விருது உள்ளிட்ட பெருமைகளைப் பெற்று வசூலிலும் சாதனை படைத்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியின் 'அசுரன்' திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

ஆடுகளம், வடசென்னை என வெற்றி நடைபோட்ட இவர்களது அசைக்க முடியாத கூட்டணி 4வது முறையாக அசுரனில் கைகோர்தது 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் சிவசாமி கதாப்பாத்திரம்

எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி உருவான இத்திரைப்படத்தில், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தன் குடும்பத்தைப் பாதுகாக்கப் போராடும் சிவசாமி காதாப்பாத்திரம் படத்திற்கு பெரும் வலுசேர்தது மகனைக் காப்பாற்றவும், நில உரிமையை மீட்டெடுக்கவும் சிவசாமி நடத்தும் உக்கிரமான வேட்டை மற்றும் அவரது கடந்த கால ஆக்ரோஷப் பின்னணி எனப் படம் நெடுகிலும் பரபரப்பான திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

வசனத்தை கொண்டாடும் ரசிகர்கள்

கல்வி மட்டுமே ஒரு மனிதனின் வாழ்க்கையையும் சமூகப் படிநிலையையும் புரட்டிப் போடும் ஆற்றல் கொண்டது என்பதை அசுரன் மிக அழுத்தமாகப் பதிவு செய்தது.

குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் தன் மகனிடம் தனுஷ் பேசும், "காடு இருந்தா எடுத்துக்குவாங்க, ரூபா இருந்தா பிடுங்கிக்குவாங்க.ஆனா, படிப்பை மட்டும் யாராலும் நம்மகிட்ட இருந்து பறிக்கவே முடியாது சிதம்பரம்" என்ற வரிகள் இன்றும் ஆழமாக அனைவரது மனதிலும் பசுமரத்தாணிப்போல பதிந்திருக்கிறது . கல்வியின் வலிமையை ஓங்கி பிடிக்கும் இந்த வசனத்தை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் 7 ஆண்டுகள் நிறைவை ஒட்டி சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com