

இந்த வாரம் பல புதிய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன. 'அன்பில் அவன்', 'ஹைக்கூ', '418', 'கிரேஸி கல்யாணம்', 'ஸ்டெப்ஸ்', 'தி ப்ளூ ரோடு' உள்ளிட்ட படங்கள் மற்றும் தொடர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தை நாளை மறுநாள் முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ‘அன்பில் அவன்’ படத்தை கண்டு மகிழலாம்.
யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில், ஏகன் மற்றும் ஸ்ரீதேவி அப்பல்லா நடிப்பில் வெளியான 'ஹைக்கூ' திரைப்படம் நாளை மறுநாள் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கீர்த்தன் நாதகவுடா இயக்கத்தில், பிரசாந்த் நீல் தயாரிப்பில் வெளியான ஹாரர் த்ரில்லர் படமான '418' திரைப்படம் நாளை மறுநாள் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
அனுபமா பரமேஸ்வரன் மற்றும் தருண் பாஸ்கர் நடிப்பில் வெளியான ‘கிரேஸி கல்யாணம்’ திரைப்படம் நாளை மறுநாள் முதல் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ் மொழிகளில் கண்டு களிக்கலாம்.
அமெரிக்க அனிமேஷன் திரைப்படமான ‘ஸ்டெப்ஸ்’ நாளை மறுநாள் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
‘தி ப்ளூ ரோடு’ வெப் சீரிஸ் நாளை மறுநாள் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த கிரைம் திரில்லர் தொடர் 8 எபிசோடுகளைக் கொண்டது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.