பத்தா முதல் அக்கா வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்து ஓர் பார்வை...

20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.
ஓ.டி.டி. தளங்கள்
ஓ.டி.டி. தளங்கள்
Published on: 
Summary

இந்த வாரம் பல புதிய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன. 'பத்தா', 'சிக்மா', 'இம்மார்டல்', 'தி டார்க் ஹெவன்', 'லவ் ஆல்வேஸ்', 'அக்கா' போன்றவை முக்கியமானவை. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இவை, ரசிகர்களுக்கு பல்வேறு தளங்களில் கிடைக்கின்றன.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

பத்தா

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ‘பத்தா’. இம்மாதம் 1-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இப்படம் வருகிற 29-ந்தேதி முதல் நெட் பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம். திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்கள் மற்றும் மீண்டும் காண விரும்பும் சினிமா விரும்பிகள் இப்படத்தை ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்.

சிக்மா

இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்த 'சிக்மா' (Sigma) திரைப்படம் வருகிற 30-ந்தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் காணலாம்.

இம்மார்டல்

அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘இம்மார்டல்’. கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது திரையரங்க வெற்றியைத் தொடர்ந்து, , ‘இம்மார்டல்’ திரைப்படம் வரும் 30-ந்தேதி முதல் Sony Liv ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

டார்க் ஹெவன்

எஸ். பாலாஜி இயக்கத்தில் சித்து சித், தர்ஷிகா மற்றும் ரித்விகா நடிப்பில் வெளியான 'தி டார்க் ஹெவன்' படத்தை வருகிற 30-ந்தேதி முதல் ஓ.டி.டி.யில் கண்டு மகிழலாம். இந்திய ரசிகர்கள் அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் ஆஹா தமிழ் ஆகிய ஓ.டி.டி. தளங்களில் காணலாம். வெளிநாட்டில் வசிக்கும் ரசிகர்கள் சிம்பிளி சௌத் மற்றும் AP International (South Cinema) ஆகிய தளங்கள் மூலம் இப்படத்தைக் காணலாம்.

லவ் ஆல்வேஸ்

மதுமிதா இயக்கத்தில் 8 எபிசோடுகளை கொண்ட ‘லவ் ஆல்வேஸ்’ தொடர் வருகிற 30-ந்தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது. கௌரி கிஷன், ரம்ஜான் முகமது, ஜெயப்பிரகாஷ், ஜெயசுதா, மாயாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் பின்னோக்கிச் செல்லும் கற்பனை கருவோடு, நகைச்சுவை மற்றும் சுவாரசியமான கதாபாத்திரங்களுடன் இந்த வெப் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் கண்டு மகிழலாம்.

அக்கா

கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'அக்கா' வெப் தொடர் வரும் 30-ந்தேதி முதல் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இந்த தொடரை தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் கண்டு ரசிக்கலாம்.

இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com