

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
சந்தீப் ரெட்டி வங்கா, பிரணாய் ரெட்டி வங்காவின் தயாரிப்பில் வேணு கோபால் ரெட்டி இயக்கத்தில் வெளியான படம் ‘ரோமாஞ்சகம்’. கடந்த 3-ந்தேதி வெளியான காதல் நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் நாளை மறுநாள் முதல் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.
‘ஈஸ்ட் ஆஃப் ஈடன்’ என்ற ஆங்கில தொடரை வருகிற 1-ந்தேதி முதல் நெட் ஃபிளிக்ஸ் ஓடி.டி. தளத்தில் ஆங்கிலம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் காணலாம்.
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இந்தியா முழுவதும் ரூ.330 கோடி வசூலைத் தாண்டி, தற்போதுவரை வெற்றிக்கரமாக ஓடிவருகிறது. இந்நிலையில் இப்படம் வருகிற 2-ந்தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
டேட்டிங் ஆப் உலகை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘லவ்’ தொடர் வருகிற 2-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ள புதிய ரொமாண்டிக் வெப் தொடர் ‘லவ்’. நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த தொடரை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். இத்தொடரை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ள நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்த தொடர் வெளியாக உள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் ஜார்ஜ் கே இயக்கத்தில் உருவாகியுள்ள லண்டன் வழக்கறிஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட தொடரான 'வார்' தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் வருகிற 3-ந்தேதி முதல் கண்டு மகிழலாம்.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.