மொத ராத்திரி முதல் துடக்கம் வரை... இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்து ஓர் பார்வை...

20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.
ஓடிடி தளங்கள்
ஓடிடி தளங்கள்
Published on

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

மொத ராத்திரி

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவான படம் ‘மொத ராத்திரி’. புதிதாக திருமணமான மணமக்களின் முதலிரவில் நடக்கும் குடும்ப- நகைச்சுவைத் தொடர்பான கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாக ரசிகர்களின் கவனத்தையும், பலரின் பாராட்டுக்களையும் பெற்று வசூலையும் குவித்தது. இதனை தொடர்ந்து ‘மொத ராத்தி’ படம் வருகிற 18-ந்தேதி முதல் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.

ராம் அண்ட் லீலா

அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ ராஜ் நடிப்பில் வெளியான படம் ‘ராம் அண்ட் லீலா’. இப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில், தற்போது ப்ரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. அதன்படி, வருகிற 18-ந்தேதி முதல் ‘ராம் அண்ட் லீலா’ படத்தை ப்ரைம் வீடியோ கண்டு மகிழலாம்.

அங்கீகாரம்

தயாரிப்பாளர் கேஜெஆர் ராஜேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அங்கீகாரம்’. ஜே.பி. தென்பாதியான் இயக்கி உள்ள இப்படத்தில் சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ஆண்டனி, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தடகள விளையாட்டை மையமாகக் கொண்டு உருவான படம் வருகிற 18-ந்தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

இருமுடி

ஷிவ நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், பேபி நக்ஷத்திரா ஆகியோர் நடித்துள்ள படம் ‘இருமுடி’. மைத்ரி நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. வருகிற 18-ந்தேதி முதல் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

துடக்கம்

நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள படம் ‘துடக்கம்’. இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப் இயக்கத்தில் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இந்த நிலையில், ‘துடக்கம்’ படத்தை வருகிற 18-ந்தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கண்டு களிக்கலாம்.

இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com