சார்லி நடித்த லைன்மேன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது

இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது.
சார்லி நடித்த லைன்மேன் திரைப்படம் ஓடிடியில் வெளியானது
Published on: 

தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக இருப்பவர் சார்லி. இதுவரை 800 மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சார்லி, ஜெகன் பாலாஜி, அதிதி பாலன், சரண்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் லைன்மேன். இது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

லைன்மேன் சார்லியின் மகன் ஜெகன் பாலாஜி, சூரிய ஒளி மறைந்தது தானாக தெரு விளக்கு எரிவது போலவும் ஒளி வந்ததும் தானாக அணைவது போலவும் ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கிறார். அதற்கு அரசு அங்கீகாரம் பெற எடுக்கப்படும் முயற்சி, அதனால் ஏர்படும் சிக்கல்களை பற்றி பேசக்கூடிய திரைப்படமாக இது அமைந்துள்ளது.

படத்தை பார்த்த பலர் இணையத்தில் பாராட்டி பதிவு செய்து வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com