நிமிர்

பிரியதர்‌ஷன் இயக்கத்தில் உதயநிதி - நமீதா பிரமோத், பார்வதி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நிமிர்’ படத்தின் முன்னோட்டம்.
நிமிர்
Published on

மூன்சாட் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சந்தோஷ் டி.குருவில்லா தயாரித்துள்ள படம் ‘நிமிர்’.

இதில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். இவர்களுடன் நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர், மகேந்திரன், சண்முகராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

போட்டோகிராபராக நடிக்கும் உதயநிதிக்கு, இந்த படத்தில் தன் சுயபலத்தை தானே கண்டறிந்து வில்லனை பழி வாங்கும் கதாபாத்திரம்.

ஒளிப்பதிவு - என்.கே.ஏகாம்பரம், கதை - சுயாம் புஸ்கரன், வசனம் - சமுத்திரக்கனி, இசை - தர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத், படத்தொகுப்பு - நாயர் எம்.எஸ்., கலை - மோகன்தாஸ், தயாரிப்பு - சந்தோஷ் டி.குருவில்லா, இயக்கம் - பிரியதர்‌ஷன்.

படம் பற்றி கூறிய இயக்குனர்...

“இது எனக்கு ஒரு ஸ்பெ‌ஷல் படம். இவ்வளவு ஆண்டு காலம் திரைதுறையில் இருந்தாலும் இயக்குனர் மகேந்திரனுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில்லை. முதலில் அவருக்கு உதவி இயக்குனராக இருக்க ஆசைப்பட்டேன். அது நடக்காமல் போனது. இந்த படத்தில் தான் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. உதயநிதி ஸ்டாலினின் தந்தையாக அவர் நடித்துள்ளார்.

சமுத்திரகனியின் நடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. அவ்வளவு சிறப்பாக நடித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் நடிப்பு நிச்சயம் பேசப்படும். கதாநாயகி நமீதா பிரமோத் அருமையாக நடித்துள்ளார். சுவாரஸ்யமான கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்துள்ளார். ‘நிமிர்’ படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com