காதல் சேட்டையை ஆரம்பித்த ஹரிஷ் கல்யாண் - ரைசா

புமுமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடிப்பில் உருவாகும் `பியார் பிரேமா காதல்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியிருக்கிறது.
காதல் சேட்டையை ஆரம்பித்த ஹரிஷ் கல்யாண் - ரைசா
Published on

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன், `பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் ஜோடி சேர்ந்துள்ளனர். 

இளன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், பாகுபலி படத்தை வெளியிட்ட 'கே புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரிக்கின்றனர். காதல் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

நேற்று முன்தினம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. இதில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன், யுவன் ஷங்கர் ராஜா, இளன், ராஜராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com