

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "நாம் வாழும் உலகில்.." என்று தொடங்கும் ஒரு பதிவை இன்ஸ்டா ஸ்டோரியாகப் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து டிஜிட்டல் தளங்களில் விழிப்புணர்வு குறித்த பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரி பதிவில் தெரிவித்துள்ளதாவது
பாலியல் தொழிலாளர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்; ஆனால் அங்கு செல்லும் வாடிக்கையாளர்கள் பற்றி யாரும் பேசுவதில்லை: தனியாக ஒற்றை பெற்றோர் இருப்பவர்களை விமர்சிக்கும் இந்த சமூகம், ஆனால் பொறுப்பின்றி விலகிச் செல்லும் தந்தைகள் பற்றி பேசுவதில்லை
பாலியல் கொடுமைக்கு ஆளானவர்களை விமர்சிப்பவர்கள், அந்த வன்கொடுமையை செய்தவனை பற்றி பேசுவதில்லை: உண்மையை பேசுபவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள்: ஆனால் அதை மறைத்து மூடி மறைப்பவர்கள் விமர்சிக்கப்படுவதில்லை; நாம் இன்னும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
என்று பதிவிட்டுள்ளார்.