விஜய் சேதுபதி படத்துக்கு தயாரான மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் அவரது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிற நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
விஜய் சேதுபதி படத்துக்கு தயாரான மிஷ்கின்
Published on

`துப்பறிவாளன்' படத்தை தொடர்ந்து மிஷ்கின் நடிப்பில் சவரக்கத்தி படம் உருவாகி இருக்கிறது. பிப்ரவரியில் ரிலீசாகும் இந்த படத்தில் மிஷ்கின் மிரட்டல் வில்லனாக வருகிறார். 

அதனைத் தொடர்ந்து, தியாகராஜன் குமாரராஜா இயக்கும் `சூப்பர் டீலக்ஸ்' படத்தில் மிஷ்கின் பாதிரியாராக நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். மேலும் மிஷ்கின் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் சேதுபதி, பகத் பாஷில், சமந்தா, நதியா, காயத்ரி, பகவதி பெருமாள் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் வெளியாகிய சமந்தாவின் கதாபாத்திரம் குறித்த வீடியோ வைரலாக பரவ வந்தது. 

`ஆரண்ய காண்டம்' படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com