நல்ல படம்
நல்ல படம்

நல்ல படம்- திரை விமர்சனம்

போதையில் மிதந்து கொண்டிருக்கும் கதாபாத்திரமாகவும், காதல் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் ஹரிஷ் தேவையான அளவு நடிப்பை வழங்கியிருக்கிறார்.
Published on
நல்ல படம்- திரை விமர்சனம்(2.5 / 5)
Summary

மதுவை மையமாக வைத்து ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அவன் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் சுவாரசியமான திரைக்கதையுடன் சொல்ல முயன்றிருக்கிறது ‘நல்ல படம்’.

கதை

நண்பர்களுடன் சேர்ந்து எந்நேரமும் போதையில் மிதந்து கொண்டிருக்கும் ஹரிஷ், குடிப்பவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் திடீரென மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டால், மதுவையே வாழ்க்கையாக நினைத்துக் கொண்டிருக்கும் ஹரிஷின் நிலை என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் சுவாரசியமான கதை.

இயக்குநர்

மதுவுக்கு அடிமையான ஒருவனின் வாழ்க்கையையும், மதுவிலக்குக்கு எதிராக அவன் நடத்தும் போராட்டத்தையும் மையமாக வைத்து கதை நகர்கிறது. அதற்குள் காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன் என பொழுதுபோக்கு அம்சங்களையும் சரியான அளவில் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரபுராம்.

நடிகர்கள்

போதையில் மிதந்து கொண்டிருக்கும் கதாபாத்திரமாகவும், காதல் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் ஹரிஷ் தேவையான அளவு நடிப்பை வழங்கியிருக்கிறார். குறிப்பாக குடிக்கு அடிமையான மனிதனின் தடுமாற்றத்தையும், மதுவிலக்கால் ஏற்படும் தவிப்பையும் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். இருப்பினும் நடிப்பில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருந்தால் கதாபாத்திரம் ரசிகர்களிடம் இன்னும் வலுவாகப் பதிந்திருக்கும்.

ஹரிஷை காதலிக்கும் பெண்ணாக தனலட்சுமி, காதலுக்காக போராடும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். கதாநாயகனின் அம்மாவாக ரமாவும், நண்பர்களாக கல்கி ராஜா மற்றும் மொட்டை ராஜேந்திரனும் தங்களுக்கான கதாபாத்திரங்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள்.

தொழில்நுட்ப குழு

ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் அழகை அழகாக பதிவு செய்திருக்கிறது ஜெ.ஹாரிசின் ஒளிப்பதிவு. காட்சிகளுக்கு உயிர் சேர்க்கும் வகையில் சஜிஷ் னாசேவியரின் இசையும் ரசிக்க வைக்கிறது.

மதுவை மையமாக வைத்து ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அவன் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் சுவாரசியமான திரைக்கதையுடன் சொல்ல முயன்றிருக்கிறது ‘நல்ல படம்’.

X

Maalai Malar
www.maalaimalar.com