ஆல் பாஸ் பட காட்சி

ஆல் பாஸ்- திரை விமர்சனம்

முதல் பாதியில் சில இடங்களில் தடுமாற்றம் இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதை வேகம் பிடித்து சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.
Published on: 
ஆல் பாஸ்- திரை விமர்சனம்(2.5 / 5)
Summary

சென்னையின் குடிசை மாற்று குடியிருப்பில் வாழும் மூன்று குடும்பங்கள் திடீரென கிடைத்த ரூ.5 கோடி பணத்தால் எதிர்மறை மாற்றங்களை சந்திக்கின்றனர். பணம் உறவுகளையும் மனநிலையையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை எதார்த்தமாக வெளிப்படுத்தும் ‘ஆல் பாஸ்’ திரைப்படம், சுவாரஸ்யமான திரைக்கதையுடன் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

கதை

சென்னையின் குடிசை மாற்று குடியிருப்பில் ஒற்றுமையாக வாழும் மூன்று குடும்பங்கள். அவர்களின் பிள்ளைகள் தனியார் கல்லூரியில் படிக்க ஆசைப்படும் நிலையில், பொருளாதாரம் தடையாக நிற்கிறது. இதற்கிடையில் அவர்களது 3 மகன்களும் கிரிக்கெட் விளையாடும் போது எதிர்பாராத விதமாக ரூ.5 கோடி பணம் கிடைக்க, அந்தப் பணம் மூன்று குடும்பங்களின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றுகிறது. ஒற்றுமையாக இருந்தவர்கள் பணத்தின் காரணமாக எதிரெதிர் அணிகளாக மாறுகிறார்கள். அந்தப் பணம் யாருடையது, அதனால் ஏற்பட்ட சிக்கல்களில் இருந்து குடும்பங்கள் மீண்டனவா என்பதே மீதிக்கதை.

“பணம் பத்தும் செய்யும்” என்ற கருத்தை மையமாக வைத்து, சாதாரண குடும்பங்களின் வாழ்க்கையில் திடீரென கோடிக்கணக்கான பணம் வந்தால் என்ன நடக்கும் என்பதை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மைதீன்

நடிகர்கள்

நேர்மையான கதாபாத்திரத்தில் ஜெயபிரகாஷ் சிறப்பாக நடித்துள்ளார். சுப்பிரமணிய சிவா, செந்திகுமாரி, பிரசன்ன பாலச்சந்திரன், வினோதினி, மோகனா ஆகியோரின் இயல்பான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். துஷ்யந்த், ஜனனி ஜோடிக்கு நடிப்பில் இன்னும் அழுத்தம் தேவை.

கவுன்சிலராக சத்யா, எம்.எல்.ஏ.வாக சரத் லோகித்ஷவா, இன்ஸ்பெக்டராக அருவி மதன், ரோஷன் பசீர் ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். ஜேம்ஸ் வசந்தின் இசையும், தில்ராஜின் ஒளிப்பதிவும் கதையின் இயல்பான சூழலுக்கு அழகு சேர்க்கின்றன.

முதல் பாதியில் சில இடங்களில் தடுமாற்றம் இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதை வேகம் பிடித்து சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. பணம் மனிதர்களின் மனநிலையையும் உறவுகளையும் எப்படி மாற்றுகிறது என்பதை எதார்த்தமாகச் சொல்லும் படமாக ‘ஆல் பாஸ்’ அமைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com