டிசம்பரில் வெளியாகிறது மூன்வாக் திரைப்படம்

நடனம், நகைச்சுவை மற்றும் குடும்பப் பாங்கான ஒரு முழுநீள கமர்ஷியல் திரைப்படமாகும்.
டிசம்பரில் வெளியாகிறது மூன்வாக் திரைப்படம்
Published on: 

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள 'மூன் வாக்' திரைப்படம்டிசம்பர் 24, 2026அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் நகைச்சுவை மற்றும் குடும்ப கதை நிறைந்த ஒஎஉ முழு நீள் கமர்ஷியல் திரைப்படமாகும்.

மூன் வாக் திரைப்படத்தை மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளதுடன், இதில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவாவும் ஏ.ஆர். ரஹ்மானும் மீண்டும் இணைந்துள்ளனர்.

கதாப்பாத்திரங்கள்

பிரபுதேவாவுடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சதீஷ், நிஷ்மா, சுஷ்மிதா மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் யோகி பாபு 16 வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார்.

ரீலீஸ் தேதி அறிவிப்பு

இந்த நிலையில் திரைப்படமானது உலகமெங்கிலுள்ள திரையரங்குகளில் வரும் டிசம்பர் 24, 2026 அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது .

X